டெல்லி: மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் சிபிஐயால்  கைது செய்யப்பட்டு, திகாரில் அடைக்கப்பட்டுள்ள டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு உச்சநீதி மன்றம் ஜாமின் வழங்கி உத்தரவிட்டு உள்ளது. இதையடுத்து சுமார் ஐந்தரை மாத சிறை வாசத்துக்கு பிறகு கெஜ்ரிவால் திகாரில் இருந்து இன்று விடுதலை செய்யப்படுகிறார்.

கெஜ்ரிவாலுக்கு ஜாமின் கிடைத்தை ஆம்ஆத்மி கட்சியினர் இனிப்பு வழங்கி கொண்டாடி வருகின்றனர்.

டெல்லி மதுபான  கொள்ளை ஊழல் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஊழக்கு எதிராக போராட்டம் நடத்திய கெஜ்ரிவால், பின்னர் தனிக்கட்சி அமைத்து டெல்யில் ஆட்சியை பிடித்தார். தொடக்க காலத்தில் எந்தவித ஊழலும் இன்றி திறமையாக ஆட்சி செய்துவந்தவர், பின்னர் பல்வேறு ஊழல்களில் ஆம்ஆத்மி அரசு சிக்கி வருகிறது.

இதற்கிடையில் டெல்லியில் மதுபான கொள்கையில் மாற்றம் செய்த ஆம்ஆத்மி அரசின் கொள்கை முடிவு சலசலப்பை ஏற்படுத்தியது. பின்னர், இந்த கொள்கை முடிவு வாபஸ் பெறப்பட்டது. இருந்தாலும், இந்த கொள்கை முடிவால் ஊழல் நடைபெற்றதாக குற்றம் சாட்டப்பட்டது. இதுதொடர்பாக,  ஏற்கனவே துணைமுதல்வராக இருந்த சிசோடியா உள்பட பலர் கைது செய்யப்பட்ட நிலையில், கெஜ்ரிவா;ல விசாரணைக்கு ஆஜராக அமலாக்க இயக்குனரகம் (ED)  சம்மன் அனுப்பியது. ஆனால், இடி அனுப்பிய ஒன்பது சம்மன்களுக்கு பதிலளிக்காததால்,  டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்   2024ம் ஆண்டு மார்ச் 21ந்தி  அன்று இரவு 09:00 மணி அளவில் கைது செய்யப்பட்டார் .

மாநில முதல்வர் ஒருவர் அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டது.  இந்திய வரலாற்றில் இதுவே முறை.  இதைத்தொடர்ந்து இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட சிபிஐயும் அவரை கைது செய்தது. இதனால், கடந்த சில மாதங்களாக மக்கள் பணி செய்யாமல், மாநில முதல்வராக கெஜ்ரிவால் திகார் சிறையில் இருந்து வருகிறார்.

இந்த நிலையில்,  டெல்லி மதுபானக் கொள்கை ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்டோர் மீது சிபிஐ குற்றப்பத்திரிகையை  ஜூலை 29ந்தேதி  டெல்லி ரோஸ் அவென்யூ சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் சிபிஐ தாக்கல் செய்தது. அதில், ஆம் ஆத்மி கட்சியின் முன்னாள் ஊடக பொறுப்பாளர் விஜய் நாயர் பல மதுபான உற்பத்தியாளர்கள் மற்றும் வணிகர்களுடன் தொடர்பில் இருந்தார் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த மதுபானக் கொள்கை மூலம் மதுபானம் மொத்த விற்பனையாளர்களிடம் இருந்து 5 முதல் 12 சதவீதம் வரை லாபம் பெற்றுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. அதேநேரம், மதுபானக் கொள்கை ஊழலில் அரவிந்த் கெஜ்ரிவால் முக்கிய பங்காற்றி உள்ளதாகவும், இது தொடர்பான டெல்லி அரசின் அனைத்து முடிவுகளும் கெஜ்ரிவால் வழிகாட்டுதலின் படியே நடைபெற்றதாகவும் முன்னதாக சிபிஐ நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது.

ஏற்கனவே அமலாக்கத்துறையின்,  சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தொடர்பான   அரவிந்த் கெஜ்ரிவால் மீது அமலாக்கத்துறை 200 பக்கங்கள் கொண்ட குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்திருந்த நிலையில்,  சிபிஐயும் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளது.

இதற்கிடையில்,  மதுபான கொள்கை ஊழல்  வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கடந்த ஜூலை 12ஆம் தேதி உச்ச நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. இருப்பினும், சிபிஐ மூலம் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டிருப்பதால் அவர் சிறையிலே உள்ளார்.

மேலும், இந்த வழக்கு தொடர்பாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளதாக சிபிஐ உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தது. இதனையடுத்து, அதனை பதிவு செய்யுமாறு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியதுடன், கெஜ்ரிவால் சிறையில் இருந்து பணியாற்ற அரசியல் சட்டத்தில் இடமுள்ளதாக என்றும் கடந்த விசாரணையின்போது கேள்வி எழுப்பியது.  பல்வேறு கட்ட விசாரணையைத் தொடர்ந்து தீர்ப்பை ஒத்தி வைத்தது.

இந்த நிலையில், இன்று காலை உச்சநீதிமன்றம் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு  ஜாமின் வழங்கி உத்தரவிட்டுள்ளது. நீண்ட காலமாக சிறையில் இருப்பது அநியாயமாக சுதந்திரத்தை பறிப்பதாக உச்ச நீதிமன்றம் கூறுகிறது.

“சிபிஐ கைது செய்தது சட்டவிரோதம் இல்லை என்றபோதும்  அவர் நீண்டகாலமாக சிறையில் அடைக்கப்பட்டிருப்பது தவறு என்று சுட்டிக்காட்டியதுடன்,  நீதிமன்றத்துக்கு பிணைத் தொகையாக ₹10 லட்சம் செலுத்தவும் உத்தரவிட்டு உள்ளது. மேலும்,  வழக்கு தொடர்பாக அரவிந்த் கெஜ்ரிவால் பொதுவெளியில் பேசக் கூடாது என உச்சநீதிமன்றம் நிபந்தனை விதித்துள்ளது.

 

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ர்வியாலின் ஜாமீன் குறித்து ஆம் ஆத்மி எம்எல்ஏ குல்தீப் குமார் கூறுகையில், “தனக்கெதிரான அனைத்து சதிகளும் தற்போது தோல்வியடைந்துவிட்டன. அவருக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியது மிகப்பெரிய வெற்றி. மொத்த போலி மோசடியும் தற்போது வெளியாகியுள்ளது.  இது ஒரு பெரிய கொண்டாட்டம் இருக்கும் என்றார்.

ஜாமின் கிடைத்ததையொட்டி முன்னாள்துணைமுதல்வர் சிசோடியா உள்பட ஆம்ஆத்மி கட்சியினர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடி மகிழ்ந்தனர்.

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஜாமீன் குறித்து வக்கீல் சஞ்சீவ் நசியார் கூறும்போது, ​​”..சிபிஐ வழக்கில் ஜாமீன் கிடைத்துள்ளது.. பெரிய நிம்மதியான நாள். கடந்த 5 மாதங்களாக சிறையில் இருந்த முதல்வர்  இன்று விடுதலையாகிறார்.   கைது விவகாரத்தில் இரு நீதிபதிகளும் வெவ்வேறு கருத்துக்களைக் கொண்டுள்ளனர். சி.பி.ஐ.க்கு வழக்கு விசாரணைக்கு வருவதால், அவர் எப்போது வேண்டுமானாலும் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவில் கூறப்பட்டு உள்ளது என்றார்.

கலால் கொள்கை ஊழல் தொடர்பாக சிபிஐ பதிவு செய்த ஊழல் வழக்கில் டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.