புதுக்கோட்டை:

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ஆதரிப்பவர்கள் மரைகழன்றவர்கள் என்று  வைகோ காட்டமாகத் தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் எடுக்க மத்திய அரசு அனுமதித்ததை எதிர்த்து மக்கள் போராடி வருகிறார்கள். அவர்களுக்கு ஆதரவாக அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் குரல் கொடுத்து வருகிறார்கள்.

இந்த நிலையில் இன்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தலைமையில், நெடுவாசல் அருகே மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த வைகோ, தெரிவித்ததாவது:

ஹைட்ரோகார்பன் திட்ட“மீ்த்தேன் திட்டத்தை உடனே நீக்குங்க. இல்லேன்னா மொத்த விவசாயியும் உங்கள் விரோதினு சொல்லுவான்னு மோடிகிட்ட சொன்னேன். உடனே நீக்கினார். அதே மாதிரித்தான் இந்த ஹைட்ரோகார்பன் திட்டமும். இது மக்களுக்கு எதிரானது.

இந்தியாவுக்காக தமிழகம் தியாகம் செய்யணுமா.? எவனாவது இந்தத் திட்டத்தை ஆதரிச்சான்னா அவனுக்கு மரை கழன்றிருக்குன்னு அர்த்தம்” என்று வைகோ தெரிவித்தார்.