உடைகள் என்றால் முகம் சுளிக்கும் ஆபாச பட நடிகை சன்னி லியோன், தொலைக்காட்சி படப்பிடிப்புக்கு கேரள மாநிலம் வந்துள்ளார்.
கணவர் டேனியல் மற்றும் 3 வளர்ப்பு குழந்தைகளுடன் திருவனந்தபுரத்தில் உள்ள சொகுசு விடுதியில் தங்கி உள்ளார்.
படப்பிடிப்புக்கு மத்தியில் ஒரு வழக்கையும் எதிர் கொண்டார்.

சில நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதாக வாக்குறுதி அளித்து, லட்சக்கணக்கில் பணமும் வாங்கி கொண்டு அவர் ஏமாற்றி விட்டதாக கொச்சி போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
அந்த வழக்கில் சன்னியை போலீசார் இரண்டு முறை விசாரித்துள்ளனர். வழக்கு இன்னும் முடியவில்லை.
சன்னி லியோன். கேரள வழக்கப்படி அழகான சேலை கட்டி, தலையில் மல்லிகைப்பூ வைத்துக்கொண்டு, தான் தங்கியுள்ள விடுதியில் தோற்றம் அளிக்கும் போட்டோவை விடுதி நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
அவரது கணவர் டேனியல், வேட்டியும், குர்தாவும் அணிந்திருக்க, குழந்தைகள் டவுசர்- சட்டையில் போஸ் கொடுத்துள்ளனர்.
சன்னி லியோன் சேலை அணிந்துள்ள போட்டோ, கேரளாவில் வைரலாக பரவி வருகிறது.
– பா. பாரதி
[youtube-feed feed=1]