இயக்குநர் சுந்தர் சி., இருட்டு படத்தில் போலீஸ் அதிகாரியாக ஏற்கனவே நடித்துள்ளார்.
வி.ஆர்.மணி சேயோன் டைரக்டு செய்யும் புதிய படத்திலும் சுந்தர் சி., மீண்டும் காக்கி உடை அணிகிறார்.

மணி சேயோன், ‘கட்டப்பாவ காணோம்’ படத்தை இயக்கியவர். அண்மையில் இதன் ஷுட்டிங் தொடங்கியது.
படம் குறித்து இயக்குநர் சேயோன் தெரிவித்த தகவல்:
“இந்த படம் கிரைம் திரில்லர் படமாக இருந்தாலும், மற்ற திரில்லர் படங்களில் வருவது போல், தொடர் கொலைகள் போன்ற சமாச்சாரங்கள் இருக்காது. நிஜமான காவல்துறை அதிகாரியை பிரதிபலிப்பது போல், சுந்தர் சி. கேரக்டர் இருக்கும்.
சென்னையை களமாக கொண்டு இந்த படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது” என்கிறார்,இயக்குநர்.
விக்கி நந்தகோபால், ஸ்டண்ட் காட்சிகளை அமைக்க, சந்தோஷ் தயாநிதி இசை அமைக்கிறார்.
படத்துக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை.
– பா. பாரதி
[youtube-feed feed=1]