தற்போது வெப் சீரிஸ் தொடர்களில் நடித்து வரும் நடிகை சுனைனா ‘காதலில் விழுந்தேன்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர்.
தமிழ் , கன்னடம், தெலுங்கு , மலையாளம் என பல மொழி படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒருவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இவரை தான் நடிகை சுனைனா திருமணம் செய்து கொள்ள வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.