சென்னை: தேசிய மகளிர் தினத்தை முன்னிட்டு, பிரபல மென்பொருள் நிறுவன தலைவரான இன்போசிஸ் தலைவர் நாராயணமூர்த்தியின் மனைவி சுதா மூர்த்தியை, மாநிலங்களவை உறுப்பினராக குடியரசு தலைவர் முர்மு நியமனம் செய்து உத்தரவிட்டு உள்ளார். சுதா மூர்த்தி  இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கின் மாமியார்  என்பது குறிப்பிடத்தக்கது.

இன்ஃபோசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தியின் மனைவி சுதா மூர்த்தி மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் , இந்தியக் குடியரசுத் தலைவர், சுதா மூர்த்தியை மாநிலங்களவை உறுப்பினராகப் பரிந்துரைத்ததில் நான் மகிழ்ச்சியடைகிறேன். நாட்டின், சமூகப் பணி, கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சுதா மூர்த்தியின் பங்களிப்பு மகத்தானது மற்றும் மற்ற மகளிருக்கும் ஊக்கமளிக்கும் வகையில் உள்ளது. மாநிலங்களவையில் அவரது வரவு, நமது ‘மகளிர் சக்தி’க்கு ஒரு சக்திவாய்ந்த சான்றாகும், இது நம் நாட்டின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் பெண்களின் வலிமை மற்றும் திறனை எடுத்துக்காட்டுகிறது. அவரது நாடாளுமன்ற பதவிக்காலம் மிக்க பயனுள்ளதாக அமைய வாழ்த்துகள் என்று பதிவிட்டுள்ளார்.

உலகம் முழுவதும் மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், சுதா மூர்த்தி மாநிலங்களவை உறுப்பினராகியிருக்கிறார் என்ற செய்தி வெளியாகியிருக்கிறது.