மும்பை

ரத் பவார் மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவை திடீரென சந்தித்தது மகாராஷ்டிராவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற மகாராஷ்டிரா தேர்தலில் பாஜக, சிவசேனா கூட்டணி வென்று ஆட்சி அமைத்தது.  ஆனால் பாஜக கூட்டணியை முறித்துக்கொண்டு காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுடன் கூட்டணி வைத்து உத்தவ் தாக்கரேவின் சிவசேனா கட்சி தனது ஆட்சியை தக்கவைத்தது.

பிறகு திடீர் திருப்பமாக சிவசேனா கட்சியை உடைத்துக்கொண்டு பாஜகவுடன் கூட்டணி சேர்ந்து ஏக்நாத் ஷிண்டே முதல்வராக பொறுப்பேற்றார். இதே நிலையில் தேசியவாத காங்கிரஸ் கட்சி இரண்டாக உடைந்தது. அஜித் பவார் தேசியவாத காங்கிரஸ் கட்சியை கைப்பற்றி பாஜக கூட்டணியில் இணைந்து துணை முதல்வராக உள்ளார்.

இந்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ள மகாராஷ்டிரா தேர்தலில் பாஜக கூட்டணியை வீழ்த்த இந்தியா கூட்டணி கட்சிகள் வியூகம் வகுத்து வருகின்றன. இந்நிலையில், ஏக்நாத் ஷிண்டேவை உத்தவ் தாக்ரேவுடன் கூட்டணி வைத்துள்ள சரத் பவார் இன்று திடீரென சந்தித்து பேசினார். மகாராஷ்டிராவில் சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இந்த சந்திப்பு அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.