சுப.வீ

நெட்டிசன்:

ற்கெனவே ஓ.பன்னீர் செல்வம், ஜெயலலிதாவின் கல்லறையில் தியானம் இருந்தாது பெரும் செய்தியானது. நேற்று அதே பாணியில் ஜெ. அண்ணன் மகள் தீபா தியானம் இருந்திருக்கிறார்.

இது குறித்து சமூகவலைதளங்களில் பலரும் கேலியும் கிண்டலுமாக விமர்சித்து வருகிறார்கள்.

திராவிட இயக்க தமிழர் பேரவையின் பொதுச்செயலாளர் பேராசிரியர் சுப.வீர்பாண்டியனும் தன் ட்விட்டர் பக்கத்தில் இது குறித்து பதிவிட்டிருக்கிறர்:

“ஜெ கல்லறையில் தீபா 45 நிமிடங்கள் தியானம். பன்னீரை விட 5 நிமிடங்கள் கூடுதல். அடுத்து வருபவர் 50 நிமிடங்களாவது அமர வேண்டும். எடப்பாடி எப்போது?” என்றும், “ ஒரு நண்பர் கேட்கிறார், “ஜெயலலிதா என்ன யோகா டீச்சரா?” என்றும் கிண்டலாக சுபவீ பதிவிட்டுள்ளார்.