பெங்களூரு

டிகை தமன்னா குறித்த பள்ளிப் பாடத்துக்கு மாணவர்களின் பெற்றோர் எதிர்ப்பு  தெரிவித்துள்ளனர்.

நடிகை தமன்னா தமிழ் மட்டுமின்றி கன்னடம், தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழி படங்களில் முன்னணி கதாநாயகி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

கர்நாடக தலைநகர் பெங்களூரு ஹெப்பால் பகுதியில் உள்ள சிந்தி என்ற தனியார் பள்ளி பள்ளியில் 7-ம் வகுப்பு பாடத்திட்டத்தில் நடிகை தமன்னா குறித்த பாடம் சேர்க்கப்பட்டுள்ளது.

நடிகை தமன்னா குறித்து ‘சிந்த் பிரிவினைக்கு பிறகு இந்திய மக்களின் வாழ்க்கை’ என்ற பாடத்தில் குறிப்புகள் இடம் பெற்றுள்ளன. அங்கு இது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அந்த பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்  நடிகை தமன்னா குறித்து தங்கள் குழந்தைகள் கற்க வேண்டிய விஷயம் என்ன உள்ளது என்று  எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.