கடலூர்:

மிழகத்தின் டெல்டா மாவட்டங்கள் உள்பட கடலூர் புதுச்சேரி உள்பட பல இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க மத்தியஅரசு அனுமதி வழங்கி உள்ள நிலையில், கடலூரில் உள்ள  பிச்சாவரம் சுற்றுலா தளமும் ஹைட்ரோ கார்பன் திட்டங்களால் அழியும் சூழல் உருவாகி உள்ளது.

தமிழகத்தை  சுடுகாடாக மாற்றி வரும் மோடி அரசு, கடலூர், புதுச்சேரி மற்றும் விழுப்புரத்தில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கான  ஆய்வு மேற்கொள்ள, ஏற்கனவே தூத்துக்குடியை நாசமாக்கிய வேதாந்தா நிறுவனத்துக்கு அனுமதி வழங்கி உள்ளது.

இதன் காரணமாக கடலூர் மாவட்டத்தில் வங்கக்கடலை ஒட்டியுள்ள பிச்சாவரம் சதுப்பு நிலமும் பாதிக்கப்படும் அவலம் ஏற்பட்டுள்ளது.

கடலூர் மாவட்டத்தில், சிதம்பரத்துக்கு அருகில் உள்ளது பிச்சாவரம். வங்கக்கடலை ஒட்டியுள்ள பகுதி. இங்கு  சதுப்புநிலக்காடுகளும்  மாங்க்ரோவ் காடுகளுமாக இணைந்தும் பிணைந்துமாக இருக்கிற அழகிய தீவுதான் பிச்சாவரம். இயற்கை கொஞ்சம் எழில்மிகு பகுதியான இங்கு ஏராளமான வெளிநாட்டு, உள்நாட்டு பறவைகள், வன விலங்குகள் வசித்து வருகின்றன.

தமிழகத்தின் சுற்றுலா தலங்களும் ஒன்றாக திகழும் இங்கு உலகின் இரண்டாவது பெரிய அலையாத்திக் காடு  உள்ளது. மேலும்  புன்னை மரங்களில் ஒருவகையான ரபுன்னை மரங்கள் அதிகம் வளர்ந்திருக்கின்றன. ‘குளம் போலவும் ஏரி போலவும் ஆறு போலவும் அழகு காட்டி, குளுமை கூட்டி இருக்கும்  இந்தச் சூழலை, இன்னும் ரம்மியமாக்க, வியப்பூட்ட, மகிழ்வூட்ட, படகுச் சவாரியும் உள்ளது.

அழகியல் மிகுந்த இந்த வனப்பகுதியில் வேதாந்தா நிறுவனம் 20 எண்ணை கிணறுகளை அமைக்க திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இயற்கை வளம்மிக்க ஒரு பகுதியை அழிக்க முயற்சி செய்து வரும் மத்தியஅரசுக்கும், வேதாந்தா நிறுவனத்துக்கு கடுமையான எதிர்ப்பு கிளம்பி உள்ளது. சமூக வலைதளங்களில், #ஸ்டாப் ஹைட்ரோ கார்ப்ன்,  #சேவ் பிச்சாவரம் என்ற ஹேஸ்டேக் உருவாக்கப்பட்டு பகிரப்பட்டு வருகிறது.