டில்லி:
ஐன்ஸ்டீன் சொன்னதை விட இந்திய வேதங்களில் சிறந்த கோட்பாடுகள் சொல்லப்பட்டுள்ளது என்று சமீபத்தில் மறைந்த இயற்பியல் ஆய்வாளரான ஸ்டீபன் ஹாக்கிங் கூறியதாக மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன் கூறினார்.
பிரபல இயற்பியல் பேராசிரியரும், அறிவியலாளருமான ஸ்டீபன் ஹாக்கிங் கடந்த 14ந்தேதி காலமானார். இங்கிலாந்து நாட்டை சேர்ந்த மாற்றுத்திறனாளி அறிவியலாளரான இவர், சக்கர நாற்காலியில் உலவியபடியே சாதனைகளை படைத்தவர் ஸ்டீபன் ஹாக்கிங் குவாண்டம் அறிவியல், அணுக்கரு அறிவியல் துறைகளில் பல முக்கிய ஆய்வுகள் செய்தவர். இந்த நூற்றாண்டின் புத்திசாலி மனிதர்களில் ஒருவர் என்று போற்றப்படுகிறார்.
சமீபத்தில் இந்திய அறிவியல் 105வது மாநாடு மணிப்பூர் யுனிவர்சிட்டில் நடைபெற்றது. மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய மத்திய அறிவியல் தொழில்நுட்பத்துறைஅமைச்சர் ஹர்ஷ்வர்தன்
‘இந்திய வேதத்தில் உள்ள கோட்பாடு ஐன்ஸ்டீனின் சிறப்புச் சார்புக்கொள்கையைக் காட்டிலும் சிறந்தது என்று மறைந்த ஸ்டீபன் ஹாக்கிங் கூறினார்’ என்று பேசினார்.
சமன்பாடுகள் குறித்து ஜன்ஸ்டீன் 1905ம் ஆண்டு முதன்முறையாக தெரியப்படுத்தியதாகவும், ஆனால் இந்திய வேதங்களில் ஏற்கனவே இதுபோன்ற கோட்டுபாடுகள் உள்ளது என்று ஹாக்கின்ஸ் தெரிவித்துள்ளார் என்றும் கூறினார்.
ஆனால், எந்த வேதங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது என்பது குறித்து மத்திய அமைச்சர் விளக்கமளிக்கவில்லை. இதுகுறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதில் அளிக்க மறுத்துவிட்டார்.