டில்லி

டில்லி சட்டப்பேரவை தேர்தலுக்கு வாக்களிக்க வரும் வாக்காளர்களுக்கு ஸ்பஸ் ஜெட் நிறுவனம் இலவச விமான டிக்கட் வழங்க உள்ளது.

வரும் 8 ஆம் தேதி அன்று டில்லி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது.   இதையொட்டி காங்கிரஸ், பாஜக மற்றும் ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் தீவிர பிரசாரம் செய்து வுருகின்ரன.   இந்த தேர்தலில் 100% வாக்குப் பதிவு நடக்க தேர்தல் ஆணையம் பல விழிப்புணர்வு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.  அதற்கு உதவுவது போல் ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவனம் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

வெளியூரில் இருந்து டில்லி சட்டப்பேரவைக்கு வாக்களிக்க வருவோர் விமானக் கட்டணம் செலுத்தாமல் இலவசமாகப் பயணம் செய்யலாம் என ஸ்பைஸ் ஜெட்  நிறுவனம் தெரிவித்துள்ளது.  அதே வேளையில் வரி மற்றும் அரசுக்கு அளிக்க வேண்டிய கட்டணங்களைச் செலுத்த வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.   இந்த சலுகைக்கு விண்ணப்பிக்க ஒரு சில நிபந்தனைகள் உள்ளன.

அதன்படி டில்லிக்கு வர முன்பதிவு செய்பவர்களில் இருந்து தகுதியான நபர்களை விமான நிறுவனக் குழு தேர்வு செய்ய உள்ளது.    இவர்களுக்கு அடிப்படை விமானக் கட்டணம் ரத்து செய்யப்பட்டு வரி மற்றும் இதர கட்டணங்கள் வசூலிக்கப்பட உள்ளது.   அத்துடன் இந்த சலுகை வேண்டுவோர் 8ஆம் தேதி காலை டில்லிக்கு வந்து விட்டு வாக்களித்து விட்டு அன்றே திரும்ப வேண்டும் என்பதும் நிபந்தனைகளில் ஒன்றாகும்.