ஸ்பெயின் நாடாளுமன்றத்தில் கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற நம்பிக்கையில்லா தீர்மானத்தில் தோல்வி அடைந்த பிரதமர் மரியானோ ரஜோய் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
தற்போது 63 வயதாகும் ரஜோஜ், கன்சர்வேடிவ் பாப்புலர் பார்ட்டி (conservative Popular Party) கட்சியின் தலைவராக இருந்து வருகிறார். கடந்த 2011ம் ஆண்டு முதல் ஸ்பெயின் நாட்டின் பிரமாக பதவி வகித்து வருகிறர்ர்.
இவர்மீதும், இவரது கட்சியினர் மீது ஊழல் குற்றச்சாட்டுக்கள் கடந்த 2015ம் ஆண்டு முதல் சுமத்தப்பட்டு வருகின்றன. சோசலிஸ்ட் கட்சியின் தலைவர் சாஞ்சா, ரஜோய் மீது குற்றச்சாட்டு எழுப்பியதோடு, நம்பிக்கை யில்லா தீர்மானத்திற்கும் அழைப்பு விடுத்திருந்தார்.
அதைத்தொடர்ந்து நேற்று தீர்மானத்தின்மீது வாக்கெடுப்பு நடைபெற்றது. அதில், நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு ஆதரவாக 180 உறுப்பினர்களும், எதிராக 169 உறுப்பினர்களும் வாக்களித்தனர். அதைத் தொடர்ந்து பேசிய பிரதமர் ரஜோய், தனது தோல்வியை ஒப்புக்கொள்வதாக தெரிவித்தார்.
மேலும் தான் கண்டதைவிட சிறந்த ஸ்பெயினை விட்டுச்செல்வதில் பெருமையடைவதாகவும், சாஞ்சாவும் அதையே உணருவார் என்று தான் நம்புவதாகவும் அவர் தெரிவித்தார். அதைத்தொடர்ந்து அவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.
இதைத்தொடர்ந்து ஸ்பெயினின் அடுத்த பிரதமராக சோஷியலிஸ்ட் கட்சியின் தலைவரான சாஞ்சா பதவி ஏற்க உள்ளோர். அவருக்கு மரியானோ ரஜோய் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
ஸ்பெயினின் வரலாற்றில் நம்பிக்கையில்லா தீர்மானத்தில் தோற்று பதவி இழக்கும் முதல் பிரதமர் மரியானோ ரஜோய் என்பது குறிப்பிடத்தக்கது.