மாட்ரிட்: ஸ்பெயினில் நடைபெற்ற சர்வதேச குத்துச்சண்டை தொடரில், 63 கிலோ எடைப்பிரிவில், இந்தியாவின் மணிஷ் கவுசிக் தங்கப்பதக்கம் பெற்றார்.
ஸ்பெயின் நாட்டில் நடைபெறும் 35வது சர்வதேச குத்துச்சண்டை தொடராகும் இது. இதில், ஆண்களுக்கான 63 கிலோ பிரிவு இறுதிக்கு தகுதிபெற்றார் இந்திய வீரர் மணிஷ்.
அதில், டென்மார்க் நாட்டின் நிகோலாய் டெர்டேரினை எதிர்கொண்டு வீழ்த்தி, தங்கப்பதக்கத்தைப் பெற்றார் மணிஷ் கவுசிக்.
ஆண்கள் 69 கிலோ பிரிவில், இந்தியாவின் விகாஸ் கிருஷ்ணன் வெள்ளி வென்றார். மற்றபடி, 75 கிலோ பிரிவில் இந்தியாவின் ஆஷிஸ் குமாரும், 57 கிலோ பிரிவில் இந்தியாவின் முகமது ஹுசாமுதீனும், 81 கிலோ எடைப்பிரிவில் சுமித் சங்வானும், 91 கிலோ பிரிவில் இந்தியாவின் சதிஷ் குமாரும் வெள்ளி வென்றனர்.