சியோல்: தென் கொரிய அதிபர் பிரகடனம் செய்த அவசரநிலை ராணுவச் சட்டம் சில மணி நேரங்களில் முடிவுக்கு வந்தது. தென் கொரிய நாடாளுமன்றம் இராணுவச் சட்டத்தை திரும்பப் பெற வாக்களித்ததால், அவசரநிலை பிரகடனத்தை திரும்பப் பெற அதிபருக்கு கட்டாயம் ஏற்பட்டது. இதனால்,   நாடாளுமன்ற வளாகத்திற்குள் நுழைய முயன்ற ராணுவப் படைகள் திரும்பப் பெறப்பட்டது.

இந்த அறிவிப்பால்  சுமார் 6மணி நேரம் தென்கொரியாவில் சலசலப்பு ஏற்பட்டது. மக்களிடையே குழப்பம் தொடர்ந்த நிலையில், தெருக்களில் டாங்கிகள் மற்றும் ஜெட் விமானங்கள் பறந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால், இந்த பரபரப்பு 6மணி நேரத்திற்குள் முடிவுக்கு வந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

தென் கொரியாவில் ராணுவ ஆட்சி பிரகடனத்தை அந்நாட்டின் அதிபர் யூன் சாக் யோல்  நேற்று (டிசம்பர் 3ந்தேதி)  திடீரென அறிவித்துள்ளார். வடகொரிய ஆதரவாளர்களை நாட்டிலிருந்து வெளியேற்றுவதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அரசியல் சாசன அமைப்பை காப்பாற்றவே இது செய்யப்பட்டுள்ளதாகவும் தனது தொலைக்காட்சி உரையில் யூன் சாக் யோல் கூறினார். மேலும், ராணுவச் சட்டத்தை விதிப்பதைத் தவிர வேறு வழியில்லை என அதிபர் யோல்  என தெரிவித்திருந்தார்.

இது அந்நாட்டு மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுவரை ஜனநாயக நாடாக இருந்து வந்த தென்கொரியாவில் திடீரென ராணுவ ஆட்சி அறிவிக்கப்பட்டது உலக நாடுகளிடையேயும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அதிபரின் பிரகடனத்தை எதிர்த்து  நாடாளுமன்ற கட்டடம் அருகே மக்கள் போராட்டம் நடத்தினர்.  நாட்டின் ஆளும் மற்றும் எதிர்கட்சினர் அதிபரின் இந்த திடீர் அறிவிப்பை கடுமையாக  எதிர்த்தனர். மேலும், இந்த நடவடிக்கை அரசியலமைப்பிற்கு எதிரானது என்று கண்டனம் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் லீ ஜே மியுங், நாடாளுமன்றத்தில் திரளுமாறு நாட்டு மக்களுக்கு அழைப்பு விடுத்தார்.

அதைத்தொடர்ந்து, போராட்டக்காரர்கள் கூடுவதை தடுக்க தலைநகர் சோலில் உள்ள நாடாளுமன்றத்தின் நுழைவு வாயிலில் போலீஸ் குவிக்கப்பட்டது. ஏறக்குறைய 300 ஆயுதமேந்திய வீரர்கள் ஒரே இரவில் பாராளுமன்ற மைதானத்திற்குள் நுழைந்ததாக தென் கொரிய அதிகாரி ஒருவர் கூறினார்.

ராணுவச் சட்டக் குழப்பத்திற்குப் பிறகு தென் கொரிய ஜனாதிபதி பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்து வந்தன.  இதற்கிடையில் மக்கள் போராட்டத்தை தடுக்க சாலைகளில் ராணுவ டேங்குகளும் அணிவகுத்து பயமூட்டி வந்தன.

ராணுவ ஆட்சியை அறிவிக்கும் ஜனாதிபதியின் நடவடிக்கையைத் தடுக்கும் வகையில் உடனடியாக  தென் கொரிய நாடாளுமன்றம் கூட்டப்பட்டு, அதிபரின் அறிவிப்புக்கு  எதிராக தீர்மானம்  நிறைவேற்றப்பட்டது.

இதன் காரணமாக, அதிபர்,  அவசரநிலை பிரகடனத்தை திரும்பப் பெற்றார்.   தென் கொரிய அதிபர் பிரகடனம் செய்த அவசரநிலை ராணுவச் சட்டம் சில மணி நேரங்களில் முடிவுக்கு வந்தது.  இதைத்தொடர்ந்து, நாடாளுமன்ற வளாகத்திற்குள் நுழைய முயன்ற ராணுவப் படைகள் திரும்பப் பெறப்பட்டது.

இராணுவச் சட்டக் குழப்பத்திற்குப் பிறகு தென் கொரிய ஜனாதிபதி பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.

தென்கொரியாவில் கடந்த 50ஆண்டுகளில் தற்போதுதான் முதன்மறையாக ராணுவ ஆட்சி பிரகணப்படுத்தப்பட்டது. ஆனால், அதற்கு கடும் எதிர்ப்பு எழுந்ததால், அது வாபஸ் பெறப்பட்டது.  தென் கொரியாவில் கடைசியாக 1979இல் ராணுவ ஆட்சி அறிவிக்கப்பட்டது. நீண்ட கால அதிபர் ஆட்சி கவிழ்ப்பின்போது படுகொலை செய்யப்பட்டார். அப்போது ராணுவ ஆட்சி அறிவிக்கப்பட்டது