டில்லி
தாம் மக்களவைத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என சோனியா காந்தி அறிவித்துள்ளார்.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி ராஜஸ்தான் மாநிலத்திலிருந்து மாநிலங்களவைக்கு. போட்டியிடுகிறார். நேற்று இதற்கான வேட்புமனுவைத் தாக்கல் செய்தார். சோனியா காந்தி தற்போது உத்தரப்பிரதேசத்தின் ரேபரேலி தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக உள்ள நிலையில், வரும் தேர்தலில் ரேபரேலி மக்களவை தொகுதியில் சோனியா காந்தியின் மகள் பிரியங்கா காந்தி போட்டியிட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ளார்.
சோனியா காந்தி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“நான் இன்று இருக்கும் நிலைக்குக் காரணம் நீங்கள்தான் என்பதைப் பெருமையுடன் கூறுவேன். உங்கள் நம்பிக்கையைக் காப்பதற்காக என்னால் முடிந்த அனைத்தையும் செய்திருக்கிறேன். இப்போது உடல்நலம் மற்றும் வயது பிரச்சினைகள் காரணமாக, எதிர்வரும் மக்களவை தேர்தலில் நான் போட்டியிடப் போவதில்லை.
என்னுடைய இந்த முடிவிற்குப் பிறகு நான் உங்களுக்கு நேரடியாகச் சேவை செய்வதற்கு வாய்ப்பில்லை. ஆனால் என் இதயமும், ஆன்மாவும் எப்போதும் உங்களுடன் இருக்கும். கடந்த காலத்தைப் போலவே எதிர்காலத்திலும் நீங்கள் எனக்கும் என் குடும்பத்திற்கும் ஆதரவாக நிற்பீர்கள் என்று எனக்குத் தெரியும்”
என்று அறிவித்துள்ளார்.