த்திப்பட்டி

ருப்புக்கோட்டை அருகில் உள்ள ஆத்திப்பட்டியில் உள்ள நிர்மலாதேவியின் வீட்டு பூட்டை உடைத்து திருட முயற்சி செய்யப்பட்டுள்ளது.

பேராசிரியை நிர்மலா தேவி தன்னிடம் படித்த மாணவிகளை தவறான வழியில் நடத்த முயன்றதக கைது செய்ய்ப்பட்டுள்ளார்.  இவருடைய நீதிமன்றக் காவல் நேற்று முடிவடைந்த நிலையில் நேற்று நீதிமன்றத்தில்  ஆஜர் படுத்தப் பட்டார்.   நிர்மலாதேவிக்கு வௌம் 23 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.

அருப்புக்கோட்டை அருகில் உள்ள ஆத்திப்பட்டியில் நிர்மலாதேவியின் வீடு உள்ளது.  நேர்று இரவு யாரோ அவரது வீட்டின் பூட்டை உடைத்துள்ளனர்.  தகவல் அறிந்த காவல்துறையினர் விரைந்து சென்று சோதனை மேற்கொண்டுள்ளனர்.  நிர்மலாதேவியின் வீட்டில் உள்ள ஆவணங்களை யாரேனும் திருட முயற்சித்தனரா என்னும் கோணத்தில் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.