டெல்லி: ஆபாச இணையதளங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையிலும், சமூக வலைதளங்களில் ஆபாசங்கள் எல்லைமீறி சென்றுகொண்டிருக்கின்றன. இதை கட்டுப்படுத்த வேண்டும் என கோரிக்கைகள் எழுந்துள்ள நிலையில், அதற்கான நடவடிக்கை எடுக்க மத்தியஅரசு முடிவு செய்துள்ளது. இதற்கு ஒருமித்த கருத்து தேவை என கூறியுள்ளது.
அரசு சமூக வலைதளங்களில் ஆபாசம் நிறைந்த, அருவறுக்கத்தக்க பதிவுகளைக் கட்டுப்படுத்த சட்டங்களை கடுமையாக மத்திய சட்டத்துறை முடிவு செய்துள்ளது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாடாளுமன்ற குளிா்கால கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. நேற்றைய (நவ. 27) கேள்வி நேரத்தின்போது பேசிய பாஜக எம்.பி. அருண் கோவில், ‘சமூக வலைதளங்களில் சட்டத்துக்குப்புறம்பாக, ஆபாசம் நிறைந்த மற்றும் பாலியல் ரீதியிலான, அவை தொடர்புடைய உள்ளீடுகள் ஒளிபரப்பப்படுவதை கண்டறிந்து சோதனை செய்ய தற்போது இருக்கும் நடைமுறைகள் என்ன? என கேள்வி எழுப்பியதுடன்,
தற்போது நடைமுறையில் இருக்கும் சட்டங்களால், ஆபாசங்களை தடுக்க முடியவில்லை என்றவர், அதனால், ஆபாசங்களை தடுக்க சட்டம் கடுமையாக்கப்படுமா என கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதில் கூறிய மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் அஸ்விணி வைஷ்ணவ், “இன்றைய காலகட்டத்தில், சமூக ஊடகம் என்பது அதிக சுதந்திரத்துடன் விளங்கும் தளமாக உள்ளது. ஆனால் அதற்கென கட்டுப்பாடுகள் அதிகம் இல்லை. அதில் அருவறுக்கத்தக்க பதிவுகளும் இடம்பெறுகின்றன.
சமூக வலைதளங்களில் ஆபாசம் நிறைந்த மற்றும் அருவறுக்கத்தக்க பதிவுகளைக் கட்டுப்படுத்த, இப்போது இருக்கும் சட்டங்களில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும், அதன்மூலம், சட்டம் கடுமையாக்கப்பட வேண்டும்” என்றார். மேலும், இந்த விவகாரத்தில் நாடாளுமன்ற நிலைக்குழு ஆலோசித்து முடிவெடுக்கும் என்றும் அவர் கூறினார்.