சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, இதுவரை (ஜனவரி 13ந்தேதி இரவு வரை) அரசுப் பேருந்துகளில் 6.90 லட்சம் பேரும், ஆம்னி பேருந்துகளில் இருந்து 2.72 லட்சம் பேரும் பயணம் செய்துள்ளனர் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஜன.09 முதல் நேற்று (ஜனவரி 13) நள்ளிரவு 12 மணி வரை 6.90 லட்சம் பேர் பயணம் மேற்கொண்டுள்ளனர் என தமிழ்நாடு அரசும், ஆம்னி பேருந்துகள் மூலம் 2.72 லட்சம் பேர் பயணம் மேற்கொண்டுள்ளதாக ஆம்னி பேருந்துகள் உரிமையாளர்கள் சங்கமும் தெரிவித்துள்ளது.

பொங்கலையொட்டி, 5 நாட்கள் தொடர் விடுமுறை விடப்பட்டுள்ளதால் நகர்ப்புறங்களில் வசிக்கும் லட்சக்கணக்கான மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கும், பலர் சுற்றுலா தலங்களுக்கும் படையெடுத்து வருகின்றனர். இதனால், பேருந்து மற்றும் ரயில் நிலையங்களில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. இன்று மாலை முதல் மேலும் பல லட்சம் மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்குச் செல்வதற்காக பேருந்துகள், ரெயில்கள் மூலமும் சென்னை நகரை விட்டு புறப்பட்டு கொண்டு இருக்கின்றனர். சிலர் தங்களது சொந்த வாகனங்கள் மூலமாக சொந்த ஊர்களுக்கு சென்றாலும் பெரும்பாலானவர்கள் பேருந்து மற்றும் ரயில்கள் மூலம் தங்களது பயணத்தை தொடர்கின்றனர்.
இந்த நிலையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஜன.09 முதல் ஜனவரி 13 நள்ளிரவு 12 மணி வரை 6.90 லட்சம் பேர் பயணம் மேற்கொண்டுள்ளனர். பயணிகள் முண்டியடிப்பதை தவிக்க போலீசார் நியமிக்கப்பட்டு இருந்தனர்.
ஜனவரி 13ந்தேதி மட்டும் அரசுப் பேருந்துகளில் 2.02 லட்சம் பேர் பயணம் மேற்கொண்டனர். வழக்கமாக இயக்கப்படும் 2,092 பேருந்துகளுடன், கூடுதலாக 2,238 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
அதே வேளையில், ஆம்னி பேருந்துகள் மூலம் 2.72 லட்சம் பேர் பயணம் மேற்கொண்டுள்ளதாக அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பொங்கல்பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து தமிழகம் முழுவதும் பல்வேறு ஊர்களுக்கு ஆம்னி பேருந்துகள் கடந்த 9ம் தேதி முதல் இயக்கப்பட்டு வருகின்றன.
அந்தவகையில் கடந்த 9ம் தேதி 1,230 பேருந்துகளில் 49,200 பயணிகளும், 10ம் தேதி 1,100 பேருந்துகளில் 44,000 பயணிகளும், 11ம் தேதி 1,180 பேருந்துகளில் 47,250 பயணிகளும், 12ம் தேதி 1,450 பேருந்துகளில் 58,000 பயணிகளும், 13ம் தேதி 1,860 பேருந்துகளில் 74,400 பயணிகளும் என ஒட்டுமொத்தமாக 2,72,850 பயணிகள் பொங்கலையொட்டி சொந்த ஊர் சென்றுள்ளனர். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
[youtube-feed feed=1]