கொழும்பு:

தங்கம் கடத்தியதாக இலங்கையில் 6 இந்தியர்கள் கைது செய்யப்பட்டனர்.


கடந்த ஜனவரி 23-ம் தேதி இலங்கை பண்டாரநாயகே சர்வதேச விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

அப்போது, இந்தியாவைச் சேர்ந்த 6 பேரிடம் சோதனை நடத்தப்பட்டது. அதில், அவர்கள் ரூ.30 லட்சம் மதிப்புள்ள தங்க பிஸ்கட்களை சென்னைக்கு கடத்திச் செல்ல முயன்றது தெரியவந்தது.

அவர்கள் லக்கேஜ் பைகளிலும், ட்ரவுசர் பைகளிலும் தங்க பிஸ்கட்களை மறைத்து எடுத்து வந்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட 6 பேரும் 36 முதல் 53 வயதுக்குட்பட்டவர்கள்.

கைது செய்யப்பட்டுள்ள அவர்களிடம் விமான நிலைய சுங்க அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.