சிவகார்த்திகேயன் நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் உருவாக இருக்கும் “மாவீரன்” படத்தில் அவருக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் நடிக்க இருக்கிறார்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று துவங்கியது.

மண்டேலா படத்திற்காக சிறந்த அறிமுக இயக்குனர் மற்றும் சிறந்த வசனங்களுக்கான இரண்டு தேசிய விருதுகளை வென்ற இயக்குனர் மடோன் அஸ்வின் இந்தப் படத்தை இயக்குகிறார்.

தவிர 80 களில் தமிழ் மற்றும் மலையாள திரையுலகில் முன்னணி நட்சத்திரமாக வலம்வந்த நடிகை சரிதா இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார்.

பல படங்களுக்கு டப்பிங் மட்டுமே பேசி வரும் சரிதா நீண்ட இடைவெளிக்குப் பின் திரையில் தோன்ற இருக்கிறார்.

இந்தப் படத்தின் டைட்டில் டீசர் இன்று வெளியானதுடன் சிவகார்த்திகேயனின் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியானது.

மணிரத்னம் இயக்கிய தளபதி படத்தில் ரஜினி கெட்டப் போல் உள்ளது என்று சிவகார்த்திகேயன் கெட்டப் குறித்து சமூக வலைத்தளங்களில் பகிரப்படுகிறது.

 

[youtube-feed feed=1]