கஜா புயல் பாதிப்பிலும் நிராதரவு நிலையிலும் 12 ஆம் வகுப்பில் 524 மதிப்பெண் எடுத்த பேராவூரணி மாணவி சகானா, மேற்படிப்பு படிக்க வழியில்லாமல் வறுமையில் தவித்தார்.

இதனையறிந்த சிவகார்த்திகேயன் ஊக்கம் அளித்து சகானாவை நீட் பயிற்சி மையத்தில் சேர்த்தார்.

சிவகார்த்திகேயனின் உதவி மட்டுமில்லாது அவரது ஊக்கம் சகானாவை மருத்துவராக்கியுள்ளது. 2020 ஆம் ஆண்டு 273 மதிப்பெண் பெற்று 120 இடத்தை பிடித்த சகானாவுக்கு திருச்சி அரசு மருத்துவக்கல்லூரி இடம் கிடைத்துள்ளது.

மேலும் அந்த மாணவி குறித்து சமூக வலைதளங்களிலும், ஊடகங்களிலும் தகவல் பரவியதையடுத்து அவரது குடிசை வீட்டிற்கு, தஞ்சாவூர் ஆட்சித்தலைவர் அண்ணாதுரை, சஹானாவின் வீட்டுக்கு சோலார் மூலம் மின் விளக்கு அமைத்துக் கொடுத்ததோடு, தன் சொந்தப் பணத்தில் பத்தாயிரத்தைக் கொடுத்து உதவினார்.