நடிகர் விஜயின் 47வது பிறந்த நாளையொட்டி அவரது தளபதி 65 புதிய திரைப்படத்தின் பெயர் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது. பீஸ்ட் எனப் இப்படத்துக்கு பெயரிடப்பட்டுள்ளது.

இந்த படத்தினை சன் பிக்சர்ஸ் தயாரிக்கின்றனர்.இந்த படத்தை கோலமாவு கோகிலா மற்றும் டாக்டர் படங்களின் இயக்குனர் நெல்சன் இயக்குகிறார்,அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.இந்த படத்தில் பூஜா ஹெக்டே ஹீரோயினாக நடிக்கிறார்.

விஜய், பூஜா ஹெக்டே, யோகி பாபு தவிர்த்து இதில் யாரெல்லாம் விஜய்யுடன் நடிக்கிறார்கள் என்பதைப் படக்குழு அறிவிக்காமலேயே இருந்தது. அண்மையில் விஜய்யுடன் செல்வராகவன் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்திருந்தது .

செல்வராகவனைத் தொடர்ந்து விடிவி கணேஷ், லிலிபுட் ஃபரூக்கி, ஷைன் டாம் சாக்கோ, அபர்ணா தாஸ், அன்குர் அஜித் விகால் ஆகியோரும் ‘பீஸ்ட்’ படத்தில் நடிக்கவுள்ளதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

இப்படத்தில் விஜய்க்கு வில்லனாக 3 பேர் நடிக்க உள்ளதாக கூறப்பட்டது. அதன்படி செல்வராகவன், மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ ஆகியோர் வில்லனாக நடிக்க ஒப்பந்தம் ஆகி உள்ளனர்.

இந்நிலையில், 3-வது வில்லன் யார் என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது. சார்பட்டா பரம்பரை படத்தில் டான்ஸிங் ரோஸாக கலக்கிய ஷபீர், பீஸ்ட் படத்தில் விஜய்க்கு வில்லனாக நடிக்க உள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது.

இந்த நிலையில், பீஸ்ட் படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு பாடலை நடிகர் தனுஷ் எழுதவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், அப்பாடலை தனுஷையே பாட வைக்க இசையமைப்பாளர் அனிருத் முடிவெடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. தற்போதுவரை இது குறித்து எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகாத நிலையில், இத்தகவல் உண்மையாக இருக்கவேண்டும் என்பதே விஜய் மற்றும் தனுஷ் ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

அதேபோல் பீஸ்ட் படத்தில் சிவகார்த்திகேயனும் பாடல் எழுதுவதுடன் பாடவும் செய்கிறார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

[youtube-feed feed=1]