மயிலாடுதுறை:
சீர்காழியில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வட்டத்தில் கொட்டித் தீர்த்த கனமழையின் காரணமாக, பல கிராமங்களில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கன மழையால் பெரும்பாலான பள்ளிகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ள நிலையில், மோட்டார் மூலம் மழை நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. மேலும், பல பள்ளிகள் நிவாரண முகாம்களாகவும் செயல்பட்டு வருகின்றன. மாணவர்களின் நலன் கருதி சீர்காழி வட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் லலிதா உத்தரவிட்டுள்ளார்.