ஆந்திரப் பிரதேச துணை முதல்வர் பவன் கல்யாணின் இளைய மகன் மார்க் சங்கர் செவ்வாய்க்கிழமை காலை சிங்கப்பூரில் உள்ள ஒரு பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில் காயமடைந்ததாக ஜன சேனா கட்சி தெரிவித்துள்ளது.

இது குறித்து X-ல் தகவல் அளித்துள்ள ஜன சேனா, பீதி அடையத் தேவையில்லை என்று தெரிவித்துள்ளது.

தீ விபத்துக்கான காரணம் தெரியவில்லை. இந்த சம்பவத்தில் மார்க்கின் கை மற்றும் காலில் காயம் ஏற்பட்டது. “புகையை சுவாசித்ததால் அவருக்கு சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டது” என்று அதில் குறிப்பிட்டுள்ளது.

உடனடியாக அவர் உள்ளூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த சம்பவம் குறித்து ஆந்திரப் பிரதேச முதல்வர் என். சந்திரபாபு நாயுடு மற்றும் முன்னாள் முதல்வர் ஒய்.எஸ். ஜெகன் மோகன் ரெட்டி கவலை தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில், சிங்கப்பூர் செல்வதற்கு முன் திட்டமிட்டபடி அரக்கு பள்ளத்தாக்குக்கு அருகிலுள்ள குரிடி கிராமத்திற்குச் செல்வேன் என்று பவன் கல்யாண் கூறினார்.

மார்க் ஷங்கர், பவன் கல்யாணின் மூன்றாவது மனைவி அன்னா லெஷ்னேவாவின் மகனாவார்.