கடந்த பிப்ரவரி மாதம் வெளியான ‘அய்யப்பனும் கோஷியும்’ படத்தை இயக்கியவர் சச்சி. இந்தப் படம் மாபெரும் வெற்றியடைந்தது.

இதனைத் தொடர்ந்து இந்தப் படத்தின் தமிழ் ரீமேக் உரிமையைக் கைப்பற்றப் பலரும் போட்டியிட்டனர். இறுதியாக தயாரிப்பாளர் பைவ் ஸ்டார் கதிரேசன் இந்தப் படத்தின் ரீமேக் உரிமையைக் கைப்பற்றியுள்ளார்.

ஆரம்பத்திலிருந்தே இந்த ரீமேக்கில் சசிகுமார் நடிக்கவுள்ளது உறுதியாகியுள்ளது.

தற்போது சிம்புவை நடிக்கவைக்கப் படக்குழு பேச்சுவார்த்தை தொடங்கியிருக்கிறது. சிம்புவும் இதில் நடிக்க ஆர்வம் காட்டியிருக்கிறார்.