நடிகை ஸ்ரேயா சரண் ரஷ்யாவை சேர்ந்த விளையாட்டு வீரர் ஆண்ட்ரோ கோஸ்சீவ் என்பவரை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் செய்து கொண்டார்.

இந்த நிலையில் தற்போது அவருக்கு குழந்தை பிறந்து ஒரு வருடம் ஆகி விட்டதாகவும் பெண் குழந்தை பிறந்ததாகவும், கொரோனா லாக்டவுன் நேரத்தில்தான் கருவுற்று குழந்தை பெற்றுக் கொண்டதாகவும் தன்னுடைய தேவதை மிகவும் உடல் நலத்துடன் இருப்பதாகவும் அறிவித்திருந்தார். குழந்தைக்கு ‘ராதா’ என்ற பெயரை வைத்துள்ளார்.

மேலும் அவர் தனது குழந்தையின் வீடியோவை சமூக வலைத் தளத்தில் வெளியிட்டு நிலையில் அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது. நடிகை ஸ்ரேயா சரண் தற்போது ‘ஆர்.ஆர்.ஆர்’ உள்ளிட்ட ஒருசில படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகை ஸ்ரேயாவிற்கு இன்ஸ்டாகிராமில் 3 மில்லியன் பின்தொடர்பாளர்கள் உள்ளனர். தனது கணவருடன் எடுத்துக்கொள்ளும் வீடியோவை அடிக்கடி சமூக வலைதளங்களில் பதிவிடுவார்.

அந்த வகையில் நடிகை ஸ்ரேயா தனது குழந்தையுடன் கொஞ்சி விளையாடும் வீடியோ ஒன்றை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அதில் , ’இந்த வீடியோவை எடுத்ததற்கு நன்றி’ எனக்கூறி ஆண்டராய் கோசீவை டேக் செய்துள்ளார்.

https://www.instagram.com/reel/CV9ypr5AnHX/