டெரோடூன்: ஜீன்ஸ் அணிந்த பெண்களைப் பார்த்து அதிர்ச்சியடைந்தேன்; அவர்கள் சமூகத்திற்கு என்ன செய்தியை தெரிவிக்க விரும்புகிறார்கள் என்று குழந்தைகள் விழாவில் கலந்துகொண்ட உத்தரகாண்ட் புதிய முதல்வர் தீரத் சிங் ராவத், பெண்கள் ஜீன் அணிவதை கடுமையாக விமர்சித்தார்.
உத்தரகாண்ட் மாநில தலைநகர் டேராடூனில், மாநில குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் ஏற்பாடு செய்த இரண்டு நாள் பட்டறை நடைபெற்றது. இந்த விழா வில் அதன் தலைவர் உஷா நேகியும் கலந்துகொண்டார். தொடக்க நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, நிகழ்ச்சியை தொடங்கி வைத்து உரையாற்றிய மாநிலத்தன் புதிய முதல்வர் தீரத் சிங் ராவத், பெண்களின் ஆடை அணியும் விதத்தை கடுமையாக விமர்சித்தார்.
அப்போது, “வீட்டில் சரியான கலாச்சாரம் கற்பிக்கப்படும் ஒரு குழந்தை, அவர் எவ்வளவு நவீனமானவராக இருந்தாலும், வாழ்க்கையில் ஒருபோதும் தோல்வியடைய மாட்டார்.” என்றவர், சமீபத்தில், தன்னார்வ தொண்டு நிறுவனத்தை நடத்தி வந்த ஒரு பெண் கிழிந்த ஜீன்ஸ் அணிந்து வந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தேன் என்றவர், “இந்த வகையான பெண் சமூகத்தில் மக்களைச் சந்தித்து அவர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக வெளியே சென்றால், சமூகத்திற்கு, நம் குழந்தைகளுக்கு என்ன மாதிரியான செய்தியை நாங்கள் தருகிறோம்? என்பது குறித்து சிந்திக்க மறுக்கிறார்கள் என்று கேள்வி எழுப்பினார்.
இதுபோன்ற நடைமுறைகள் எல்லாம் வீட்டிலேயே தொடங்குகிறது என்று கூறியவர், நாம் என்ன செய்கிறோம், நமது குழந்தைகள் பின்பற்றுகிறார்கள் என்பதை பெரும்பாலான தாய்மார்கள் கவனிக்க தவறுகிறார்கள், கிழிந்த ஜீன்ஸ் சமூக முறிவுக்கு வழிவகுக்கிறது, இது போதைப் பொருள் துஷ்பிரயோகத்திற்கும் வழிவகுக்கிறது இது குழந்தைகளுக்காக பெற்றோர்கள் அமைத்துள்ள “மோசமான முன்மாதிரியின்” விளைவாகும் என்றும் காட்டமாக விமர்சித்தார்.
“கியாஞ்சி சே சன்ஸ்கார் (கத்தரிக்கோலால் கலாச்சாரம்) நன்றாக இருக்கும் ஜீன்சை, கத்திரிக்கோல் கொண்டு வெட்டிக்கொண்டு, வெறும் முழங்கால்களைக் காண்பித்தல், கிழிந்த டெனிம் அணிந்து பணக்கார குழந்தைகளைப் போல தோற்றமளித்தல் போன்றை சமூக சீர்கேடுக்கு வழிவகுக்கும் என்று எச்சரித்தவர்,
பெண்கள் குறைவில்லாமல், முழங்கால்களைக் காட்டுகிறார்கள். இது நல்லதா? இதுபோன்ற பழக்கவழக்கங்ள் எங்ககிருந்து வருகிறது? இவை அனைத்தும், மேற்கத்தியமயமாக்கலின் ஒரு பைத்தியம் என்றார்.
மேற்கத்திய உலகம் நம்மைப் பின்தொடரும் போது, யோகா செய்வது… அவர்களின் உடலை சரியாக மூடுவது என்று கூறியவர், இதுபோன்று கலாச்சார சீரழிவுகள் ஏற்படுவதை தடுப்பதில் பள்ளிகள், ஆசிரியர்கள் பங்கு அவசியம் என்றும் வலியுறுத்தினார்.
அதைத்தொடர்ந்து உரையாற்றிய மந்திரி கணேஷ் ஜோஷி, எல்லா பெண்களும் நல்ல குழந்தைகளை வளர்ப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என்று கூறியதுடன், “பெண்கள் வாழ்க்கையில் செய்ய விரும்பும் எல்லா விஷயங்களையும் பற்றி பேசுகிறார்கள், ஆனால் அவர்களுக்கு மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், அவர்களது குடும்பத்தினரையும் குழந்தைகளையும் கவனிப்பதே” என்று தெரிவித்தார்.