நேற்று சனமிடம் முந்திரிக்கொட்டை மாதிரி முந்த மாட்டேன் என 10 முறை சொல்ல சொல்லி பாலாஜி சொன்னார். டாஸ்க் முடிந்து வெகுநேரம் கழித்து பாலாஜி இப்படி பண்ணிட்டானே என சனம் அழ அவருக்கு அனிதா ஆறுதல் கூறினார்.

பாலாஜி பின்னர் சனமிடம் மன்னிப்பு கேட்டார். அப்போது அருகில் இருந்த ஷிவானி-கேப்ரியலா இருவரும் தனியே எழுந்து சென்று அதுகுறித்து விவாதம் செய்தனர். கேபி அமைதியாக இருக்க அப்பவே சொல்லி இருக்கணும் இவ்ளோ லேட்டா தான் தோணுதா? என்பது போல ஷிவானி டென்ஷன் ஆனார்.

பாலாவை வேல்முருகன் எழுப்பும் போதே உடம்பு முடியல என சொன்னார். ஆனால் எதற்கு வம்பு என நினைத்தாரோ என்னவோ தெரியவில்லை வேல் முருகன் அதை சபையில் சொல்லவில்லை.

இதற்கிடையில் பாலாஜி-ஷிவானி இடையே ஒரு தனி டிராக் ஓடியது. டாஸ்க் படி ஷிவானி பழங்களை ஸ்பூனில் எடுத்து பாலாஜிக்கு ஊட்டி விட்டார். ஆனால் டாஸ்க் முடிந்தும் கூட ஷிவானி அதை செய்தது ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இதைப்பார்த்து பக்கத்து பெட்டில் இருந்த சம்யுக்தா கூட தம்பி டாஸ்க் முடிஞ்சிருச்சு என கலாய்த்தார்.


இன்றைய ப்ரோமோவில் புரோமோவில் பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு ஒரு டாஸ்க் கொடுக்கப்படுகிறது. அதாவது தங்களின் மனதில் இருக்கும் நினைவுகளையும், யாரை மிகவும் மிஸ் செய்கிறார்கள் என்பது பற்றியும் கூற வேண்டும். இதனையடுத்து போட்டியாளர்கள் பலரும் தங்களது குடும்பத்தினர் பற்றிய நினைவுகளை பகிர்ந்து கண்கலங்குகின்றனர்.


இரண்டாவது புரோமோவில், ஷிவானி பாலாஜிக்கு குடை பிடித்து அவருடன் நடப்பதையும். இருவரும் இணைந்து தனுஷின் “ஊதுங்கடா சங்கு” பாடலை பாடுவதையும் காணமுடிகிறது. இப்படியே போனால் இந்த சீசனிலும் ஒரு காதல் ஜோடி உருவாகுமா என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.