சீரடி:

புகழ்பெற்ற சீரடி சாய்பாபா கோவில் இன்று மாலை 3 மணியுடன் மூடப்படுவதாக சாய்பாபா கோவில் அறக்கட்டளை அறிவித்து உள்ளது. கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து உள்ளது.

ஐரோப்பிய நாடுகளில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வீரியம் காட்டத் தொடங்கி உள்ளது. இதையொட்டி, மக்கள் கூடுவதை தவிர்க்கும் நோக்கில், பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய மாநில அரசுகள் எடுத்து வருகின்றன.

ஏற்கனவே திருப்பதி ஏழுமலையான் கோவில் உள்பட, தமிகத்தில் பல்வேறு கோவில்களிலும் பக்தர்களுக்கு கடும் சோதனை செய்யப்பட்ட பிறகே தரிசனத்துக்கு அனுமதி வழங்கப்படுகிறது. மேலும் கோவில்களுக்கு வருவதை தவிர்க்குமாறும் பக்தர்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டு உள்ளத.

இந்த நிலையில்,  கொரோனா வைரஸ் தொற்றை கருத்தில் கொண்டு மகாராஷ்டிராவில் உள்ள ஷீர்டி சாய்பாபா கோயில் இன்று பிற்பகல் 3 மணி முதல் மூடப்படும் என்று சீரடி சாயி டிரஸ்ட் அறிவித்து உள்ளது.

மகாராஷ்டிராவில் ஏற்கனவே பிரபலமான  சித்திவிநாயக், மும்பாதேவி உட்பட பல  முக்கிய கோவில்கள் மூடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.