டாக்கா
இந்து மதத்தலைவரை கைது செய்த வங்கதேச அரசுக்கு ஷேக் ஹசீனா கண்டனம் தெரிவித்துள்ளார்,
வங்கதேசத்தில் உள்ள, ‘சம்மிலிதா சனாதனி ஜோதே’ என்ற இந்து அமைப்பின் தலைவர் சின்மாய் கிருஷ்ண தாஸ் பிரம்மச்சாரி ‘இஸ்கான்’ எனப்படும் அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தின் முன்னாள் நிர்வாகியாகவும் இருந்துள்ளார்.
கடந்த மாதம் 30 ஆம் தேதி இந்து அமைப்பினர் நடத்திய ஊர்வலத்தின் போது, வங்கதேச தேசிய கொடியை அவமதித்ததாக கிருஷ்ண தாசை சமீபத்தில் அந்நாட்டு காவல்துறையினர் கைது செய்தனர்.
அவர் மீது தேச துரோகம் உட்பட 18 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவரது ஜாமின் மனு நிராகரிக்கப்பட்டது. இந்து மதத்தலைவர் கைதுக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ள ஷேக் ஹசீனா
”ஹிந்து மதத்தை சேர்ந்த தலைவரை காவல்துறையினர் தவறாக கைது செய்துள்ளனர். இது கண்டனத்துக்கு உரியதாகும். எனவே அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். “
என கண்டனம் தெரிவித்துள்ளார்