சென்னை: தமிழக அரசின் தலைமைச் செயலாளராக இன்று ஓய்வு பெறும் சண்முகம் தமிழக அரசின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழக அரசின் 46வது தலைமைச் செயலாளராக உள்ள சண்முகத்தின் பதவிக்காலம் இன்றுடன் நிறைவடைகிறது. இன்று தலைமைச் செயலாளர் பதவியில் இருந்து ஓய்வு பெறுகிறார். இதையடுத்து, அவரை தமிழக அரசின் ஆலோசகராக நியமித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
சேலம் மாவட்டத்தைச் சோ்ந்த சண்முகம், விவசாயக் குடும்பத்தில் பிறந்த அவர், 1985ம் ஆண்டு ஜூன் 7ம் தேதி பணியில் சோ்ந்தார். பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்த அவர், 2010ம் ஆண்டு நிதித்துறை முதன்மைச் செயலாளராக நியமிக்கப்பட்டார்.
2011ல் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகும், அவரே நிதித் துறை செயலாளராக தொடா்ந்தார். முந்தைய தலைமைச் செயலாளா் கிரிஜா வைத்தியநாதன் 2019ம் ஆண்டு ஜூன் 30ம் தேதியுடன் ஓய்வு பெற்ற போது, புதிய தலைமைச் செயலாளராக சண்முகம் பொறுப்பேற்றார். 2020ம் ஆண்டு ஜூலையுடன் ஓய்வு பெற்ற நிலையில் 6 மாதங்கள் வரை, பணி நீட்டிப்பு அளிக்கப்பட்டது.