டில்லி
இந்தியாவுக்கு 4 நாள் சுற்றுப்பயணமாக செர்பிய நாட்டின் துணை பிரதமர் வந்துள்ளார்,
செர்பிய குடியரசு நாட்டின் துணை பிரதமராக பதவி வகிப்பவர் இலிகா டேசிக். இவர் வெளிவிவகாரத் துறை அமைச்சராகவும் உள்ளவர் ஆவார். இவர் இந்தியாவுக்கு 4 நாள் சுற்றுப்பயணமாக வந்துள்ளார். டில்லி சர்வதேச விமான நிலையத்தில் இந்திய அரசின் உயர் அதிகாரிகள் வரவேற்றனர்.
நாளை அவர் ஆக்ரா செல்ல இருக்கிறார். மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜுடன் நாளை மறுநாள் சந்திப்பு ஒன்றை நிகழ்த்துகிறார். அத்துடன் அன்று மாலை 3 மணிக்கு நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக் கொள்ளும் இலிகா டேசிக் சிறப்புரை நிகழ்த்த உள்ளார்.