சென்னை: தமிழக சட்டப்பேரவையில் டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிராக தனித்தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டது. இந்த தீர்மானத்தை தாக்கல் செய்து பேசிய அமைச்சர் துரைமுருகன், இந்த திட்டத்திற்கு தமிழக அரசு எதிர்த்த போதும் சுரங்க ஏல நடவடிக்கையை மத்திய அரசுமேற்கொண்டது கண்டிக்கத்தக்கது என பேசினார்.
2நாள் நடைபெறும் சட்டப்பேரவை கூட்டத்தொடரின் முதல் நாளான இன்று கேள்வி நேரம் முடிந்ததும், டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிரான அரசினர் தனித்தீர்மானத்தை அவை முன்னவரான அமைச்சர் துரைமுருகன் கொண்டு வந்தார். தீர்மானத்தை வாசித்த அவர், “மதுரை மாவட்டம் மேலூர் வட்டம் நாயக்கர்பட்டி கிராமத்தில்டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கான உரிமத்தை இந்துஸ்தான் ஜிங்க் நிறுவனத் திற்கு வழங்கியுள்ளது. இத்தகைய உரிமங்களை மாநில அரசுகளின் ஒப்புதல் இன்றி ஏலம் விடக் கூடாது என ஏற்கெனவே வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த சுரங்கத்திற்காக தேர்வு செய்யப்பட்டுள்ள இடம் பல்லுயிர் பெருக்கத் தலமாக 2022ம் ஆண்டு தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.” என கூறினார். மேலும், மாநில அரசு அனுமதியின்றி சுரங்க உரிமைகளை ஏலம் விடக்கூடாது என்றார்,
மேலும், இவற்றையெல்லாம் கருத்தில் கொள்ளாமல் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க அனுமதி அளித்திருப்பதை தமிழ்நாடு அரசும், மக்களும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் எனவும் தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.