டில்லி:

மாநில மொழிகளில் நடத்தாமல், இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே தபால்துறை பணிகளுக் கான தேர்வு நடத்தப்பட்டது நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில், அந்த தேர்வை ரத்த செய்வதாக மத்திய அரசு அறிவித்தது. தொடர்ந்து மாநில மொழிகளில் தேர்வு நடத்தப்படும் என்று கூறியது.

இந்த நிலையில்,  ரத்து செய்யப்பட்ட தபால் துறை தேர்வு செப்டம்பர் 15-ம் தேதி நடைபெறும் என தபால்துறை அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் தபால்துறையில் காலியாக உள்ள பணிகளுக்கான தேர்வு கடந்த 14ம் தேதி நடைபெற்றது. இது இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே நடத்தப்பட்டது. மாநில மொழிகள் புறக்கணிக்கப்பட்டது. இந்த பிரச்சினை பெரும் சர்ச்யையை ஏற்படுத்தியது. நாடாளுமன்றத்தில் தமிழக எம்.பி.க்கள் குரல் எழுப்பினர்.

இதையடத்து,  தபால் துறை தேர்வு செய்யப்படும் என்று பாராளுமன்றத்தில்  மத்திய மந்திரி ரவிசங்கர் பிரசாத் அறிவித்தார். அதையடுத்து  ரத்து செய்யப்பட்ட தபால் துறை தேர்வு செப்டம்பர் மாதம் 15-ம் தேதி நடைபெறும் என தபால் துறை அறிவித்துள்ளது.

இந்தி பேசாத மாநிலங்களில் ஆங்கிலம் அல்லது அம்மாநில மொழிகளில் தேர்வு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.