உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் (SCBA) தலைவர் பதவிக்கான தேர்தலில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் வெற்றி பெற்றுள்ளார்.

சிபல் 1066 வாக்குகளும், இவரை அடுத்து மூத்த வழக்கறிஞர் பிரதீப் ராய் 689 வாக்குகளும், தற்போதைய தலைவர் மூத்த வழக்கறிஞர் டாக்டர் ஆதிஷ் சி அகர்வாலா 296 வாக்குகளையும் பெற்றனர்.
இவர்களைத் தவிர, பிரியா ஹிங்கோராணி, திரிபுராரி ரே, நீரஜ் ஸ்ரீவஸ்தவா ஆகியோரும் போட்டியிட்டனர்.
SCBAவின் தலைவராக சிபல் பதவியேற்பது இது நான்காவது முறையாகும். துணைத் தலைவராக ரச்சனா ஸ்ரீவஸ்தவாவும், செயலாளராக விக்ராந்த் யாதவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
சிபல் இதற்கு முன்பு SCBA தலைவராக மூன்று முறை தேர்ந்தெடுக்கப்பட்டார், கடைசியாக இருபத்தி மூன்று ஆண்டுகளுக்கு முன்பு 2001லும்,.அதற்கு முன், அவர் 1995-96 மற்றும் 1997-98 ஆகிய ஆண்டுகளில் தலைவராக பதவி வகித்தார்.
[youtube-feed feed=1]