மதுரை: தமிழகத்தில் கொரோனா 2-ம் அலை பரவி வருவதால் டாஸ்மாக் மதுகடைகளை மூட உத்தரவிடக் கோரி மதுரைக் கிளையில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா 2-ம் அலை வேகமாக பரவி வருகிறது. இதனால் பாதிப்பும், உயிரிழப்பும் உச்சமடைந்து வருகிறது. இதன் காரணமாக இரவு நேரம் மற்றும் ஞாயிறு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் வணிக நிறுவனங்களுக்கும் பல கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.
இந்த நிலையில், அரசு மதுபானக் கடைகளான, டாஸ்மாக் மதுகடைகளை மூட உத்தரவிடக் கோரி மதுரைக் கிளையில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. இதை மனுவாக தாக்கல் செய்தால் விசாரிக்கப்படும என நீதிபதிகள் தெரிவித்தனர்.
இதையடுத்து, திருச்செந்தூரைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்தன் என்பவர் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு நாளை விசாரிக்கப்படும் என நீதிபதிகள் சிவஞானம், ஆனந்தி அமர்வு அறிவித்துள்ளது.