கோலாலம்பூர்

லேசிய முன்னாள் பிரதமர் மீது தேச துரோக வழக்கு பதியப்பட்டுள்ளது.

மலேசியா கடந்த 1957-ம் ஆண்டு பிரிட்டனிடம் இருந்து விடுதலை பெற்ற பிறகு அங்கு மன்னராட்சி தொடங்கியது. மலேசியாவில் உள்ள 9 மலாய் மாகாண சுல்தான்கள் அல்லது ஆட்சியாளர்கள் சுழற்சி முறையில் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை மலேசியாவின் மன்னராக பதவியேற்று வருகின்றனர்.

கடந்த 14-ந்தேதி, கெலாண்டனில் நடைபெற்ற இடைத்தேர்தல் பிரசாரத்தின்போது பேசிய முஹ்யித்தீன், 10-வது பிரதமராவதற்கு தனக்கு போதிய ஆதரவு இருந்தும், அப்போதைய மன்னர் சுல்தான் அப்துல்லா தன்னை அப்பதவிக்கு நியமிக்கவில்லை என கேலிக்குரிய வகையில் பேசியதாக கூறப்படுகிறது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவின.

எபவே முன்னாள் மன்னர் சுல்தான் அப்துல்லா குறித்து அவதூறான வகையில் பேசியதாக அந்நாட்டின் முன்னாள் பிரதமர் முஹ்யித்தீன் மீது குற்றம்சாட்டப்பட்டு தேச துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது., இந்த வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றபோது, தன் மீதான தேச துரோக குற்றச்சாட்டுக்கு முஹ்யித்தீன் திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்தார்.

முஹ்யித்தீன் இது தொடர்பாக மேல் விசாரணை நடத்தப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.  முஹ்யித்தீனுக்கு இந்த வழக்கில் ஜாமீன் வழங்கப்பட்டுள்ள நிலையில், வழக்கு விசாரணை நவம்பர் 4-ந்தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.