லண்டன்:
பிரிட்டன் இளவரசர் ஹாரி மற்றும் மெகன் மார்கில் திருமணம் வரும் மே 19ம் தேதி நடக்கிறது. விண்ட்ஸார் காஸ்டிலில் உள்ள புனித ஜார்ன் சாப்பலில் 3 கோடி பவுண்ட் செலவில் நடக்கும் இந்த அரச குடும்ப திருமணத்தில் பல்வேறு நாடுகளில் இருந்து ஆயிரகணக்கான விஐபி.க்கள் கலந்துகொள்கின்றனர்.
அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த திருமணத்தை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. ஆயுதம் ஏந்திய போலீஸ் அதிகாரிகள், மோப்ப நாய்கள், தீவிர ரோந்து பணி ஆகியவை தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
திருமணம், வரவேற்பு நடக்கும் இடங்கள், மணமக்கள் ஊர்வல வழித்தடம் போன்ற இடங்களில் அங்குலம் அங்குலமாக போலீசார் சோதனையிட்டு வருகின்றனர். மன்னர் குடும்ப திருமண நிகழ்ச்சியில் எவ்வித அசம்பாவித சம்பவங்களும் நடைபெறாத வகையில் போலீசார் கண்ணும் கருத்துமாக பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.