போபால்: கொரோனா பரவல் காரணமாக போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடத்த போபாலில் தற்காலிக தடை விதிக்கப்பட்டு உள்ளது.

மத்திய பிரதேச மாநிலம் போபாலில் சில நாள்களாக கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் புதியதாக 199 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

மீண்டும் அதிகரிக்க துவங்கியிள்ள கொரோனாவால் போபால் மற்றும் இந்தூர் நகரில் போராட்டங்கள் மற்றும் ஊர்வலங்கள் நடத்த தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.

திருமணம், பொழுதுபோக்கு மற்றும் மத வழிபாட்டு நிகழ்ச்சிகளில் 200 பேருக்கு மேல் பங்கேற்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. போபால் அரசு இத்தகைய நிகழ்ச்சிகளில் அவசியம் தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.