1992 இல் கமல், சிவாஜி கணேசன் நடிப்பில் உருவான படம், தேவர் மகன்.தமிழக கிராமத்து வாழ்வியலைச் சொன்ன இந்தப் படம்,

ஹாலிவுட் காட்ஃபாதர் படத்தின் கதையை தழுவியது என்றால் ஆச்சரியமாக இருக்கும்.

தேவர் மகன் படத்தின் இரண்டாம் பாகத்துக்கான முயற்சிகள் நடந்து வருகின்றன. இதில் நாசரின் மகனாக விஜய் சேதுபதியும், நாயகனாக விக்ரமும் நடிக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. இவர்கள் இருவருமே கமலின் தயாரிப்பில் (விக்ரம் – கடாரம் கொண்டான், விஜய் சேதுபதி – விக்ரம்) நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தேவர்மகன் இரண்டாம் பாகத்தை பகத் பாசிலின் மாலிக் படத்தை இயக்கிய மகேஷ் நாராயணன் இயக்க வாய்ப்புள்ளது.

தேவர் மகனின் வெற்றிக்கு இளையராஜாவின் இசையும், பி.சி.ஸ்ரீராமின் ஒளிப்பதிவும் முக்கிய காரணங்களாக இருந்தன. அவர்கள் தேவர் மகன் 2 படத்தில் பணிபுரிய அதிக வாய்ப்புள்ளது.