உத்தரகாண்ட் மாநிலத்தில் ஹரிஷ் ராவத் தலைமையில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடந்து வந்தது. ஆனால் முதல்–மந்திரிக்கு எதிராக முன்னாள் முதல்–மந்திரி விஜய் பகுகுணா தலைமையில் 9 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் போர்க்கொடி உயர்த்தினர். பாரதீய ஜனதா கட்சியுடன் அவர்கள் கை கோர்த்தனர். இதன் காரணமாக ஹரிஷ் ராவத் அரசு, சட்டசபையில் மார்ச் 28–ந் தேதி நம்பிக்கை தீர்மானத்தை எதிர்கொள்ள இருந்தது.
Union Minister of State in the Ministries of Parliamentary Affairs Harish Rawat
ஆனால் அதற்கு முந்தைய நாளில் (மார்ச் 27–ந் தேதி) அங்கு அரசியல் சாசன இயந்திரம் செயலிழந்து போய் விட்டதாக கூறி, ஜனாதிபதி ஆட்சி பிரகடனம் செய்யப்பட்டது. இதற்கு ஆதாராமாய்  ராவத் பேரம் பேசும் காணொளியை உலவவிட்டது.
மத்திய அரசின் இந்த அதிரடி நடவடிக்கை, பெருத்த சர்ச்சையை ஏற்படுத்தியது.மத்திய அரசின் இந்த முடிவை கண்டித்ததோடு, ஜனாதிபதி ஆட்சியையும் உத்தரகாண்ட் மாநில உயர் நிதிமன்றம் கடந்த மாதம் 22-ம் தேதி ரத்து செய்தது.
மத்திய பாஜக அரசு உச்சநீதிமன்றத்தை நாடியது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, சிவகீர்த்தி சிங் ஆகியோர் அடங்கிய அமர்வு, உத்தர காண்ட் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு இடைக்காலத் தடை விதித்து, அடுத்தகட்ட விசாரணையை ஏப்ரல் 27-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.
அதன்படி புதனன்று இவ்வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஹரிஷ் ராவத் பட்ஜெட் தாக்கல் செய்த போது, காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 9 பேர், அதனை எதிர்த்து வாக்களித்தபோதே ராவத் ஆளும் உரிமையை இழந்து விட்டதாக மத்திய அரசின் அட்டார்னி ஜெனரல் முகுல் ரோத்கி வாதிட்டார். அப்போது, எம்எல்ஏக்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதால்தான் 365-ன்படி உத்தரகாண்டில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டதா? இந்த பிரிவின்படி உத்தரகாண்டில் ஆளுநர் தற்போது நம்பிக்கை வாக்கெடுப்புக்கு அழைக்க முடியுமா? என்பது உள்ளிட்ட 7 கேள்விகளை எழுப்பிய நீதிபதிகள், அதுபற்றி மத்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் உத்தர விட்டு, விசாரணையை மே 3-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.அதுவரை உத்தரகாண்ட் மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி நீடிக்கும் என்று கூறிய நீதிபதிகள், ஏப்ரல் 29-ஆம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தக் கூடாது என்றும் உத்தரவு பிறப்பித்தனர்.
Supreme-Court-building-New-Delhi-India
 இந்நிலையில் உச்சநீதிமன்ற அமர்வு முன்பு மத்திய அரசின் மேல்முறையீடு மனு விசாரணை வந்தது. உத்தரகாண்டில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த தயார் எனவும்  மேலும் நம்பிக்கை வாக்கெடுப்பை முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் கண்காணிக்க வேண்டும் என்று  மத்திய அரசின்  பதில்மனுவில்  கோரிக்கை  வைக்கப்பட்டது.
உச்சநீதிமன்ற கண்காணிப்பில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த மத்திய அரசு தயாரா என்று விளக்கம் கேட்டு இருந்தது.  மத்திய அரசு அதற்கு சம்மதம் தெரிவித்ததை அடுத்து உச்ச நீதிமன்றம் கீழ்கண்ட உத்தரவை விதித்துள்ளது. முதல்வர் ஹரிஷ் ராவத் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு வரும் மே 10ம் தேதி நடத்த உச்ச நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.மேலும் உத்தரகாண்ட் சட்டபோரவையில் நடத்தப்படும் இந்த நம்பிக்கை வாக்கெடுப்பு காலை 11 மணி முதல் மதியம் 1 மணிக்குள் நடத்தப்பட வேண்டும் .

harish rawat 3

வீடியோ பதிவு செய்ய உத்தரவு :
உத்தரகாண்ட் மாநில டி.ஜி.பி. மற்றும்  மாநில தலைமைச் செயலாளர் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கை பராமரிக்க வேண்டும். இந்த நிகழ்வுகள் அனைத்து வீடியோ பதிவு செய்யப் பட்டு சமர்ப்பிக்கப் பட வேண்டும்,  நம்பிக்கை வாக்கெடுப்பு முடிவுகள் மே 11ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப் பட வேண்டும்.
 
09 எம்.எல்.ஏ.-க்கள் வாக்களிக்க தடை :
இந்நிலையில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏக்கள் 9 பேரும் நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்து கொள்ள தடைவிதித்து உச்ச நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மே 13ம் தேதி தமது தீர்ப்பை உச்ச நீதிமன்றம் அறிவிக்க முயற்சிக்கும் எனக் கூறியுள்ளது.

 
 

மத்திய அரசை விமர்சித்த நீதிபதி பந்தாடப்பட்டார் : 
இதற்கிடையில், மத்திய அரசை விமர்சித்து ஜனாதிபதி ஆட்சியை ரத்து செய்த உத்தரகாண்ட்   (நயினிடாலில் உள்ள ) உயர் நீதிமன்ற நீதிபதி கே.எம்.ஜோசப் இடமாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.   57 வயதான ஜோசப் 2014-ம் ஆண்டு உத்தரகாண்ட்  உயர் நீதிமன்ற  தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். ஜனாதிபதி ஆட்சியை ரத்து செய்த போது, மத்திய அரசு நடுநிலையோடு செயல்பட வேண்டும் என்றும், ஜனாதிபதி உத்தரவும் நீதிமன்றத்தின் பரீசிலனைக்கு உட்பட்டதுதான் எனவும் தெரிவித்து இருந்ந்தார்.  மே 4_ம் தேதி  இவர் ஆந்திர பிரதேச உயர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டுள்ளார்.