டெல்லி

ச்சநீதிமன்றம் பாலியல் வழக்கில் சிக்கிய பிரஜ்வல் ரேவண்ணா ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்துள்ளது.

பல பெண்களை பாலியல் பலாத்காரம் செய்ததாக கைது செய்யப்பட்ட கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதி முன்னாள் எம்.பி. பிரஜ்வல் ரேவண்ணாவிடம் சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் மீது 3 பாலியல் வழக்குகள் பதிவாகிஇதில் முதல் 2 வழக்குகளில் போலீசார், காவலில் எடுத்து விசாரணை நடத்தி உள்ளனர்.

தற்போது 3-வது பாலியல் வழக்கில் மீண்டும் சிறப்பு புலனாய்வு குழுவினர் பிரஜ்வல் ரேவண்ணாவை காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்., பாலியல் வழக்கில் இருந்து ஜாமீன் கோரி பிரஜ்வல் ரேவண்ணா கர்நாடக உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டு ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்து உத்தரவிட்டிருந்தது.

பாலியல் வழக்கில் ஜாமீன் கோரி பிரஜ்வல் ரேவண்ணா உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு இன்று  டெலா எம் திரிவேதி மற்றும் சதீஷ் சந்திர சர்மா ஆகிய நீதிபதிகல் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

நீதிபதிகள், ஜாமீன் மறுத்த கர்நாடக ஐகோர்ட்டின் தீர்ப்பில் தலையிட முடியாது என்று கூறினர். இதையடுத்து, ரேவண்ணா சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோகத்கி, 6 மாதங்களுக்கு பிறகு கோர்ட்டை அணுக அனுமதி கோரினார். இது குறித்து எதுவும் கூற முடியாது என்று கூறிய நீதிபதிகள், அவரது மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.