சென்னை
கடந்த 4 ஆண்டுகளாக நடிகர் சத்யராஜ் மனைவி கோமாவில் உள்ளதக அவரது மகள் தகவல் அளித்துள்ளார்.
கடந்த 1980-களில் தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வந்த சத்யராஜின் சமகால நடிகர்களாக இருந்த கமல்ஹாசன், ரஜினிகாந்த் ஆகியோர் இன்றும் ஹீரோவாக நடித்து வருகின்றனர், ஆனா; சத்யராஜ் தன் வயதுக்கு ஏற்ற கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். அவர் பாகுபலி படத்தில் கட்டப்பா கேரக்டரில் நடித்ததற்கு பின் பான் இந்தியா அளவில் பட வாய்ப்புகள் நிறைய வருகிறது. அவர் நடிப்பில் தற்போது கூலி திரைப்படத்தில் ந இப்படத்தில் ரஜினிகாந்த் உடன் சேர்ந்து நடித்து வருகிறார்
ஊட்டச்சத்து நிபுணராக பணியாற்றி வரும் சத்யராஜ் மகள் திவ்யா, தனது இன்ஸ்டாகிராமில்
“என் அம்மா மகேஸ்வரி கடந்த நான்கு ஆண்டுகளாக கோமாவில் இருக்கிறார். அவருக்கு பிஜி டியூப் மூலம் உணவளித்து வருகிறோம். மருத்துவ முன்னேற்றத்திற்காக நம்பிக்கையோடு காத்திருக்கிறோம். என் அம்மாவை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வருவோம் என நம்புகிறோம்.
கடந்த நான்கு வருடங்களாக என் தந்தை ஒரு சிங்கிள் பேரண்டாக இருக்கிறார். அப்பாவின் அம்மாவும் சில ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். நானும் என் அப்பாவுக்கு ஒரு சிங்கிள் மதராக இருக்கிறேன். நாங்கள் இருவரும் இணைந்து பவர்புல்லான சிங்கிள் பேரண்ட் கிளப்பை உருவாக்கி உள்ளோம். “
எனப் பதிவிட்டுள்ளார்.
மகேஸ்வரிkகு மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டு கோமாவுக்கு சென்றதாக கூறப்படுகிறது. திவ்யா தனது அம்மா குறித்து வெளியிட்டுள்ள இந்த பதிவு தற்போது இணையத்தில் படுவைரலாகி வருகிறது.