டில்லி:

திமுக மாநிலங்களவை உறுப்பினர் சசிகலாபுஷ்பாவின் 2வது திருமணம் கோர்ட்டு உத்தரவை மீறி நடைபெற்றுள்ளது.

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவால் அடித்து உதைக்கப்பட்ட அதிமுக மாநிலங்களவை எம்.பி.சசிகலா புஷ்பா, சமீபத்தில் தனது முதல் கணவர் திலகத்தை விவாக ரத்து செய்திருந்தார். அதைத்தொடர்ந்து அவர், ராமசாமி என்பவரை 2வது திருமணம் செய்யப்போவதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

ராமசாமி,  ஓரியண்டல் அறிவியல் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் இணை வேந்தராக இருப்பதாக கூறப்படுகிறது.  மேலும், ராமசாமி நாடாளுமன்றத்தின் சட்ட ஆலோசகராக உள்ளதாவும் தெரிகிறது.

இவர்கள் இருவருக்கும் வரும் மார்ச் 26ம் தேதி டெல்லியில் நடைபெறும் என சமூக வலைதளங்களில், திருமண அழைப்பிதழ் வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இதற்கிடையில், ராமசாமியின்  முதன் மனைவி சத்தியபிரியா கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து, அதற்கு கோர்ட்டும் தடை விதித்துள்ள நிலையில், தற்போது சசிகலா புஷ்பா ராமசாமி திருமணம் நடைபெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

டில்லியில் உள்ள ஓட்டல் ஒன்றில் அவர்களின் திருமணம்  நடைபெற்றதாகவும் கூறப்படுகிறது.