புதுடெல்லி: விவசாயிகளின் துயரத்தை பொறுக்க முடியாத ஒரு சீக்கிய துறவி, துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்ட நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாபா ராம் சிங் என்ற பெயர்கொண்ட 65 வயதான துறவி, சிங்கு என்ற எல்லைப் பகுதியில், துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார்.
பஞ்சாபியில் எழுதப்பட்ட தனது தற்கொலை குறிப்பில், விவசாயிகள் படும் வேதனையை பொறுக்காமாட்டாமல், தான் இந்த முடிவை மேற்கொண்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் உறுதிசெய்கின்றன.
பஞ்சாபின் சிங்ரா கிராமத்தில் உள்ள குருத்வாரா சாஹிப் நானாசாகரில் அவர் துறவியாக உள்ளார். இந்த சம்பவம் நிகழ்ந்ததும், மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவரை, ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர் மருத்துவர்கள்.
தற்போது, அந்த துறவியின் குடும்ப உறுப்பினர்களிடம், காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.