டில்லி

லகின் முதல் தயிர் தயாரிக்கும் ரெஃப்ரெஜிரேட்ட்ரை சாம்சங் இந்தியா நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

வீடுகளில் தயிர் தயாரிக்க பாலை நன்கு காய்ச்சி ஆறியதும் அத்துடன் சிறிது தயிரைச் சேர்ப்பது வழக்கமாகும்.  அத்துடன் இந்த கலவை தயிராக வெதுவெதுப்பான இடத்தில் சுமார் 8 – 10 மணி நேரம் வைக்க வேண்டும்.  அத்துடன் மலைப்பகுதிகள் மற்றும் குளிரான பகுதிகளில் வெப்ப நிலை காரணமாகத் தயிர் உருவாகாது.

இந்த பிரச்சினையைத் தீர்க்க சாம்சங் இந்தியா நிறுவனம் ஒரு புதிய வகை ரெஃப்ரெஜிரேட்டரை அறிமுகம் செய்துள்ளது.   இந்த ரெஃப்ரெஜிரேட்டருக்கு கர்ட் மாஸ்ட்ரோ எனப் பெயரிடப்பட்டுள்ளது.  இது அதிக அளவில் தயிரைப் பயன்படுத்தும் இந்திய மக்களுக்கு கடும் குளிர் பகுதிகளிலும் தயிர் தயாரிக்க உதவும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த வகை ரெஃப்ரெஜிரேட்டர்களில் தயிர் தயாரிக்கத் தனி இடம் அமைக்கப்பட்டுள்ளது.  பாலைக் காய்ச்சி ஆற வைத்து அத்துடன் சிறிதளவு தயிரைச் சேர்த்து இந்த இடத்தில் வைக்க வேண்டும்.   அவ்வாறு வைத்தால் சுமார் 5 மணி நேரத்தில் தயிர் ஆகி விடும்.  மிகவும் கெட்டித் தயிர்  தேவை என்றால் ஆறு மணி நேரம் ஆகும்.  இது தயிரைத் தயாரிப்பதுடன் கெடாமலும் வைத்திருக்கிறது.

இந்த ரெஃப்ரெஜிரேட்டர் 244  லிட்டர், 265 லிட்டர், 341 லிட்டர் மற்றும் 336 லிட்டர் என நான்கு அளவுகளில் வருகிறது.   இது ரூ.30990 முதல் ரூ.45,990 வரையிலான விலையில் கிடைக்கின்றன.   இந்த ரெஃபிரெஜிரேட்டரை தேசிய பால் பொருள் ஆய்வு மையம் பரிசோதித்துப் பரிந்துரை செய்துள்ளதாக சாம்சங் நிறுவனம் தெரிவிக்கிறது.