சமந்தாவும், நாக சைத்தன்யாவும் கடந்த 2017, அக்டோபர் 7-ம் தேதி இந்து – கிறிஸ்டியன் என இரு முறைப்படி திருமணம் செய்துக் கொண்டனர். கோவாவில் இவர்களின் திருமணம் மிகவும் கோலாகலமாக நடந்தது.

இதற்கிடையே சமந்தா கடந்த ஜூலை மாதம் ட்விட்டரில் தனது பெயரை ‘எஸ்’ என மாற்றியதிலிருந்து, அவர் நாக சைத்தன்யாவை விவாகரத்து செய்யவிருப்பதாக தகவல்கள் வலம் வந்தன.

நேற்று இதற்கு முற்றுப்புள்ளி வைத்தனர் சமந்தா – நாக சைத்தன்யா இருவரும். அதோடு நாக சைத்தன்யா குடும்பத்தினர் ரூ.200 கோடி ஜீவனாம்சமாக வழங்க முன்வந்த நிலையில் அதை சமந்தா மறுத்து விட்டதாகவும் தகவல்கள் வெளிவருகின்றன.

இந்நிலையில் தற்போது ட்விட்டரில் மீண்டும் தனது பெயரை திருமணத்திற்கு முன்பு இருந்ததைப் போல, சமந்தா எனவும் யூசர் நேமை சமந்தா பிரபு எனவும் மாற்றியிருக்கிறார்.