கமல்ஹாசன் நடிப்பில் இந்தியன் 2 படத்தை இயக்கி வருகிறார் இயக்குநர் ஷங்கர்.

கமல்ஹாசன் தமிழக சட்டமன்றத் தேர்தலில் பிஸியாக இருந்ததால் ஷங்கரின் அடுத்த பட அறிவிப்பு வெளியிடப்பட்டது. பிரபல தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிக்கும் 50-வது படத்தை ஷங்கர் இயக்க ராம் சரண் நாயகனாக நடிக்கிறார்.

இப்படத்தில் பிரபல தெலுங்கு நடிகரும், நடிகர் ராம்சரணின் தந்தையுமான சிரஞ்சீவியும் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இன்னும் பெயரிடப்படாத இந்தப் படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் என ஐந்து மொழிகளில் தயாராகுகிறது. அதனால் அந்தந்த மொழிகளில் உள்ள பிரபல நடிகர்களை முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க ஷங்கர் முயற்சித்து வருகிறாராம்.

இந்நிலையில் சல்மான் கானுடன் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு வருகிறதாம். இறுதி முடிவு எட்டியதும், அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்கிறார்கள் படக்குழு.