லக்னோ:
முஸ்லிம்களின் உடல்களை எரிக்கவேண்டும் என பாஜக நாடாளுமன்ற
உறுப்பினர் சாக்சி மகாராஜ் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.
உத்தரபிரதேச மாநிலம் உன்னாவ் என்ற இடத்தில் நடைபெற்ற பேரணியின்
போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

பாஜகவை பொறுத்தளவில் அதிரடியாக சர்ச்சைக்குரிய கருத்துகளை பதிவு
செய்வோர் பலர் இருந்தபோதிலும், சாக்சி மகாராஜின் கருத்துகள்
பதட்டம் ஏற்படுத்துபவையாக உள்ளன. இதனால் ஊடகங்களில் பேசப்படும் நபராக
உள்ளார். இந்தச்சூழலில் , உத்தரபிரதேச மாநிலம் உன்னாவில் நேற்று பொதுக்கூட்டம் நடந்தது.
அதில் பேசிய சாக்சி, நம் நாட்டில் இந்துக்களே அதிகளவில் உள்ளனர்.

அவர்கள் இறந்தால் நினைவிடம் கட்டப்பட வேண்டும். அதற்கு நிலம் தேவைப்படுகிறது.
முஸ்லிம்களின் மயானத்திற்கு கபர்ஸ்தான் அல்லது ஷம்ஷான் என்று எந்தப் பெயரிட்டு
அழைத்தாலும்.

யாரையும் புதைக்ககூடாது. முஸ்லிம்களின்உடல்களை எரித்தால்தான் இந்துக்களை புதைக்க இடம் கிடைக்கும் என கூறியுள்ளார்.

உத்தரபிரதேசத்தில் தேர்தல் நடந்துவரும் சூழலில் சாக்சி இவ்வாறு கூறியிருப்பதற்கு
தேர்தல் ஆணையம் என்ன சொல்லப்போகிறது என நாளைக்குதான் தெரியும்.